கடந்த 10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2,200 கோடி சேமிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி


கடந்த 10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2,200 கோடி சேமிப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 28 March 2022 2:57 PM IST (Updated: 28 March 2022 2:57 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2,200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னை,

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த 10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2,200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு செலுத்தக்கூடிய வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

1 லட்சம் விவசாயிகளுக்கான மின்சாரம் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 98,187 விவசாயிகளுக்கு 6 மாதத்தில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழல் தொடர்பான முழு அறிக்கை ஒரு வார காலத்திற்குள் கிடைக்கப்பெறும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story