பெண்ணுக்கு தவறான சிகிச்சை


பெண்ணுக்கு தவறான சிகிச்சை
x
தினத்தந்தி 28 March 2022 11:31 PM IST (Updated: 28 March 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

மனைவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்ததாக கணவன் புகார் அளித்துள்ளார்.

மனைவி வெரோனிகா (வயது 28), கர்ப்பப்பையில் நீர்கட்டியை அகற்ற புதுவை குளூனி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு கடந்த 19-ந் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பினார். 
இதற்கிடையே கடந்த 25-ந் தேதி வெரோனிகாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக பெரியகடை போலீசில் சிவராமன் புகார் அளித்தார். அதில், தனது மனைவி வெரோனிகாவுக்கு தவறான சிகிச்சை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story