கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தராக கீதாலட்சுமி நியமனம்


கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தராக கீதாலட்சுமி நியமனம்
x
தினத்தந்தி 29 March 2022 3:50 AM IST (Updated: 29 March 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தராக கீதாலட்சுமி நியமனம் கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு.

சென்னை,

தமிழக கவர்னரும், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி, அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வி.கீதாலட்சுமியை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அந்த பதவியில் அவர் 3 ஆண்டுகளுக்கு செயல்படுவார்.

வி.கீதாலட்சுமிக்கு கற்பித்தல் பணியில் மிக அதிக அனுபவம் உண்டு. 26 ஆண்டுகளாக மாணவர்களுக்கு அவர் கற்பித்து வந்துள்ளார். அவரது வழிகாட்டுதலின் பேரில் 14 பி.எச்டி. மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர். அவரது முயற்சியின் காரணமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

வேளாண்மையில் 3 புதிய பயிர் வகைகளை கொண்டு வந்ததிலும், 8 புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தியதிலும் அவரது பங்களிப்பு அதிகமாகும்.

அவரது 115 ஆராய்ச்சி அறிக்கைகள் அதற்கான இதழ்களில் வெளிவந்துள்ளன. 11 புத்தகங்களை வி.கீதாலட்சுமி எழுதியுள்ளார்.

கல்வி மற்றும் ஆரா ய்ச்சி பணிகளுக்காக 30 நாடுகளுக்கு மேல் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேற் கண்ட தகவல் கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story