ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது மீறினால் கடுமையான நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை


ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது மீறினால் கடுமையான நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 March 2022 7:27 AM IST (Updated: 29 March 2022 7:27 AM IST)
t-max-icont-min-icon

இன்று ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது.இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை,

மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன.

இதன்படி முதல் நாள் போராட்டம் நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொதுவேலைநிறுத்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளன. காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் பங்கேற்றுள்ளன.

இதன்காரணமாக, நேற்று பொதுப்போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்குள்ளானது. நேற்று அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

பேருந்துகள் மிகக்குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் ரெயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, நேற்று ஆட்டோக்களில் அதிக மக்கள் பயணம் செய்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேற்று ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், இன்று ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் இதனை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், சென்னை காவல்துறை தரப்பில் மேற்கண்ட எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story