காரை வழிமறித்து வாலிபர் படுகொலை; உடன் வந்த நண்பருக்கும் சரமாரி வெட்டு


காரை வழிமறித்து வாலிபர் படுகொலை; உடன் வந்த நண்பருக்கும் சரமாரி வெட்டு
x
தினத்தந்தி 29 March 2022 8:53 AM IST (Updated: 29 March 2022 8:53 AM IST)
t-max-icont-min-icon

காரை வழிமறித்து அதில் வந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். உடன் வந்த நண்பருக்கும் வெட்டு விழுந்தது. மற்றொரு காரில் வந்த கும்பல், இந்த சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பியது.

மானாமதுரை,  

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வாணியங்குடியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 26). இவரும், இவரது நண்பர்கள் வி.புதுக்குளத்தைச் சேர்ந்த சரவணன், விக்கி, அஜித் ஆகிய 4 பேரும் சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம் பார்த்துவிட்டு நேற்றுமுன்தினம் இரவு காரில் வி.புதுக்குளம் திரும்பி கொண்டிருந்தனர்.

வி.புதுக்குளம் விலக்கு அருகே வந்தபோது, மற்றொரு காரில் வந்த 6 பேர் கும்பல், அந்த காரை வழிமறித்து நிறுத்தியது. பின்னர் அவர்கள் காரை விட்டு இறங்கி ஆயுதங்களுடன் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் மருதுபாண்டி உள்பட 4 பேரும் தாங்கள் வந்த காரில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

அதில் மருதுபாண்டி, சரவணனை அந்த கும்பல் விரட்டிச்சென்று வாளால் சரமாரியாக வெட்டியது. விக்கி, அஜித் ஆகிேயார் தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மருதுபாண்டி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சரவணன் மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மருதுபாண்டிக்கு சிவகங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கிலும், கடந்த ஆண்டு அண்ணன், தம்பியான 2 மருத்துவ மாணவர்கள் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்பு இருப்பதும், அதேபோல் சரவணன் (27) மீதும் 2 மருத்துவ மாணவர்கள் கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

எனவே முன்விரோதத்தில் மருதுபாண்டியை கொலை செய்து இருக்கலாேமா என சந்தேகத்தில் ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள். காரில் தப்பிச் சென்ற ெகாலையாளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி, அவர்களை தேடிவருகின்றனர்.

Next Story