மூன்றாம் கட்ட சுற்றுப்பயணமாக சசிகலா அடுத்தவாரம் சேலம் செல்ல உள்ளதாக தகவல்..!


Image courtesy: PTI
x
Image courtesy: PTI
தினத்தந்தி 29 March 2022 10:27 AM IST (Updated: 29 March 2022 10:27 AM IST)
t-max-icont-min-icon

மூன்றாம் கட்ட சுற்றுப்பயணமாக வி.கே.சசிகலா அடுத்தவாரம் சேலம் செல்ல செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,
 
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூருக்கு சென்றார். சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்டுள்ள பயணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் தனது ஆதரவாளர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

இது ஆன்மீக சுற்றுப்பயணம் என்றாலும் அரசியல் ரீதியாக தனது ஆதரவு திரட்டவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், மூன்றாம் கட்ட சுற்றுப்பயணமாக வி.கே.சசிகலா அடுத்தவாரம் சேலம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம் செல்லும் அவர் அதிமுக அதிருப்தி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருப்பதாகவும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story