போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துறை மாற்றம்


போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துறை மாற்றம்
x
தினத்தந்தி 29 March 2022 6:03 PM IST (Updated: 29 March 2022 6:03 PM IST)
t-max-icont-min-icon

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வரும் ராஜ கண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். 

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்  தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக  அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி கூறி விமர்சித்ததாக நேற்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளது.  


Next Story