கடன்தொகையை திருப்பிக்கேட்டதால் ஆத்திரம் கடையை சூறையாடி தந்தை மகன் மீது தாக்குதல்


கடன்தொகையை திருப்பிக்கேட்டதால் ஆத்திரம் கடையை சூறையாடி தந்தை மகன் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 29 March 2022 10:32 PM IST (Updated: 29 March 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

கடையை சூறையாடி தந்தை-மகன் மீது தாக்குதல் நடத்தி னர்.

புதுச்சேரி
புதுவை துலுக்காணத்தம்மன் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருபாகரன். மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையை அவரது தம்பி அன்பு மற்றும் தந்தை அய்யாதுரை ஆகியோரும் கவனித்து வருகின்றனர். கடைக்கு அருகில் வசிக்கும் சக்தி என்பவர் ரூ.3 ஆயிரத்து 800-க்கு பொருட்கள் வாங்கி கடன் பாக்கி வைத்துள்ளார். 6 மாதம் ஆகியும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. அந்த பணத்தை அதே பகுதியை சேர்ந்த கல்விசெல்வம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் அவரும் பணத்தை தரவில்லை.
இந்தநிலையில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சக்தியிடம் கடையில் இருந்த அன்பு பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து சக்தி சென்றுவிட்டார். 
இந்தநிலையில் கிருபாகரன் கடையில் இருந்தபோது கல்விசெல்வம் மற்றும் 2 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் சக்தியிடம் காசு கேட்டது ஏன்? என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். கடையில் இருந்த பொருட்களை தூக்கிவீசி சேதப்படுத்தி கிருபாகரனை செங்கல்லால் தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த அய்யாதுரையையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் கல்விசெல்வம் மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=====

Next Story