துபாய் பயணம் தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான அடித்தளத்தை அமைத்துள்ளது முதல்-அமைச்சர் பேட்டி
துபாய் பயணம் தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான அடித்தளத்தை அமைத்துள்ளது என்றும், 6 தொழில் நிறுவனங்கள் ரூ.6,100 கோடி முதலீடு செய்கிறது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைச்சர்கள் வரவேற்றனர்.
அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரமாண்டமாக அமைந்தது
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு முதல் முறையாக வெளிநாட்டு பயணமாக துபாய், அபுதாபி சென்றுவிட்டு வந்திருக்கிறேன். என்னுடைய பயணம் வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமான பயணமாக மிகப் பிரமாண்டமான வகையில் அமைந்தது என்பதை முதலில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
6 மிக முக்கியமான தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கிறது. இரும்பு தளவாடங்கள் துறையில் இருக்கக்கூடிய நோபல் ஸ்டீல்ஸ் துறையோடு ரூ.1,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஜவுளித்துறையைச் சார்ந்த ஒயிட் அவுஸ் நிறுவனத்துடன் ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
உணவுத்துறையைச் சார்ந்த டிரான்ஸ் வேர்ல்டு குழுமத்தோடு ரூ.100 கோடி மதிப்பில் ஒப்பந்தமும், மருத்துவ துறையைச் சார்ந்த அஸ்டர் டி.எம். ஹெல்த் கேர் நிறுவனத்தோடு ரூ.500 கோடி மதிப்பில் ஒப்பந்தமும் போடப்பட்டிருக்கிறது. சரக்கு போக்குவரத்து நிறுவனத்தைச் சார்ந்த ஷரப் நிறுவனத்துடன் ரூ.500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
ரூ.6,100 கோடி ஒப்பந்தங்கள்
உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் கட்டுமானத்துறையைச் சார்ந்த லுலு நிறுவனத்தோடு ரூ.3,500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த 6 நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதன் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக போகிறது.
துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்று அங்கு முக்கியமான துறைகளின் அமைச்சர்களையும், அரசு சார்ந்த அலுவலர்களையும், பெரிய... பெரிய... தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் நான் சந்தித்து உரையாடி இருக்கிறேன்.
தொழில் முதலீடுக்கு ஏற்ற சூழல்
துபாய், அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பெரும் நிதி மேலாண்மை நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்கள், சிறு துறைமுகங்கள் மேம்பாடு, உணவு பதப்படுத்துதல், தொழில் பூங்காக்கள் உருவாக்கக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்திட அவைகளெல்லாம் முன்வந்திருக்கின்றன.
தமிழகத்தில் தொழில் முதலீடுக்கு ஏற்ற சூழல் இருப்பதை நான் தெளிவாக எடுத்துச்சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டில் நிலவக்கூடிய, தொழில் தொடங்க உதவக்கூடிய சாதகமான சூழ்நிலை அமைந்திருப்பதை எல்லோரும் அங்கே என்னை பாராட்டினார்கள், தமிழகத்தையும் ஒட்டுமொத்தமாக பாராட்டியிருக்கிறார்கள்.
வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவது நிச்சயம்
இப்போது 6 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது. தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. நான் சந்தித்த அனைவரையும், தமிழ்நாட்டிற்கு வருகை தரவேண்டும் என்று நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். அவர்களது வருகை தமிழகத்தினுடைய வளர்ச்சிக்கு அடித்தளமாக நிச்சயம் அமையப்போகிறது.
ஜவுளித்துறை, மருத்துவ சேவைத் துறை, உணவு பதப்படுத்துதல், இரும்பு தளவாடங்கள் செய்தல் ஆகிய துறைகள் நிச்சயமாக வளர்ச்சி பெறும். அந்த வகையில், துபாய் பயணம் தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான அடித்தளத்தை அமைத்துள்ளது.
நல்ல சூழலை உருவாக்க போகிறோம்
மேலும், தமிழ்நாட்டில் தொழில் துறையின் கீழ் இயங்கக்கூடிய தொழில் வழிகாட்டி நிறுவனம் மூலமாக மேலும் முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத்தான் இருந்தது. ஒப்பந்தம் போட்டதோடு சரி. ஆனால் நாங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அதனைவிட முக்கியமாக அந்த நிறுவனங்கள் இங்கே வந்து தொழில் தொடங்க நடவடிக்கை எடுப்பதும், துரிதப்படுத்துவதுடன் முதல்-அமைச்சரின் அலுவலகத்தில் “டாஸ் போர்டு” வைத்து மாதந்தோறும் அதை நாங்கள் ஆய்வு நடத்தி குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அந்த தொழிலைத் தொடங்கி ஒரு நல்ல சூழலை உருவாக்கப்போகிறோம்.
வெற்றிகரமான பயணம்
துபாய், அபுதாபி வாழ் தமிழர்களுக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் தந்த வரவேற்பு மிகவும் எழுச்சியோடு, உணர்ச்சியோடு இருந்தது. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாங்கள் போனபோது தமிழ்நாட்டு உணர்வைத்தான் நான் பெற்றேன். அந்த அளவிற்கு அவர்கள் உற்சாகத்தை, வரவேற்பை எனக்கு வழங்கியிருக்கிறார்கள். எனக்கே ஒரு சந்தேகம் வந்தது, இது தமிழ்நாடா அல்லது துபாயா என்று கூட எனக்கு சந்தேகம் வந்தது.
அந்த வகையில், என்னுடைய பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்பதை மீண்டும், மீண்டும் உங்கள் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
நம்பிக்கையுடன் உள்ளனர்
கேள்வி:- துபாயில் உள்ள தொழில் அதிபர்களுக்கு இங்கு வந்து தொழில் தொடங்குவதற்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது?. இங்கு வந்து தொழில் தொடங்குவதற்கு அவர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்கள்?.
பதில்:- ஒப்பந்தம் நேரடியாக கையெழுத்திட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தொடங்கினீர்கள் என்றால் எல்லா விதமான சலுகைகளும் முறையான வகையில் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலையை நிச்சயமாக உருவாக்கி தருகிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறோம். அவர்களும் அந்த நம்பிக்கையுடன் தான் இருக்கிறார்கள்.
கவலைப்படமாட்டேன்
கேள்வி:- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தொழில் வடிவம் எத்தனை மாதங்களில் வரும்?.
பதில்:- ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்து ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறோம். அதுதான் சொன்னேன், நாங்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிற தேதிக்கு முன்பே அந்த தொழிலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து வேலைவாய்ப்பை நிச்சயமாக உருவாக்கித்தருவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
கேள்வி:- உங்களுடைய பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் எல்லாம் பல குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள், அதைப் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- அவர்கள் எதிர்க்கட்சி, அப்படித்தான் சொல்வார்கள். நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது கிடையாது.
சந்தேகம் இல்லை
கேள்வி:- தொடர்ச்சியாக இப்பொழுது ஐக்கிய அரபு நாடு களில் சென்றது போல, வேறு நாடுகளுக்குச் சென்று, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நிச்சயமாக அப்படி ஒரு சூழ்நிலை வருகிறபோது நான் நிச்சயமாக பயன்படுத்துவேன், அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Tags :
Next Story