ஏப்ரல் 1-ந்தேதி முதல் 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கம்...!
ஏப்ரல் 1-ந்தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-ஜோலார்பேட்டை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (வண்டி எண்: 16089/16090) ஏலகிரி எக்ஸ்பிரஸ், நிலாம்பூர்-கோட்டயம்-நிலாம்பூர் (16325/16326) எக்ஸ்பிரஸ், புனலூர்-குருவாயூர்-புனலூர் (16327-16328) எக்ஸ்பிரஸ், கொச்சுவேலி-மங்களூரு-கொச்சுவேலி (16355/16356) அந்தியோதயா எக்ஸ்பிரஸ்,
கண்ணூர்-கோவை-கண்ணூர் (16607/16608) எக்ஸ்பிரஸ், திருச்சி-பாலக்காடு-திருச்சி (16843/16844) எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-கோட்டயம் (16366) எக்ஸ்பிரஸ், மங்களூரு-கோழிக்கோடு (16610) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மே மாதம் 1-ந்தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் மீண்டும் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த ரெயில்கள் அனைத்தும், மே 1-ந்தேதிக்கு பதிலாக, முன்னதாகவே ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. எனவே, மே மாதம் 1-ந்தேதி வரை மேற்கண்ட ரெயில்களில், முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிப்பதற்கு பயணிகள் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளுக்கான பணம் அனைத்தும் திருப்பி வழங்கப்படும்.
இதுகுறித்த தகவல்கள் அவரவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story