தர்மபுரி: வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை..!


தர்மபுரி: வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை..!
x
தினத்தந்தி 30 March 2022 10:42 AM IST (Updated: 30 March 2022 10:42 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் கொள்ளை.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சிகரல அள்ளியை சேர்ந்தவர் சின்னதுரை, இவரது மனைவி லட்சுமி (55). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நீண்ட நாட்களுக்கு முன்பு கணவர் சின்னதுரை இறந்துவிட்டார். லட்சுமி சிகரல அள்ளி அருகே உள்ள சின்ன வத்தலாபுரம் அரசு துவக்க பள்ளியில், சமையலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவ சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் செங்கப்பாடிக்கு சென்றுள்ளார். பின் சிகிச்சை முடிந்து நேற்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து ஏரியூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லட்சுமி தனது வீட்டில் வைத்திருந்த தாலிக்கொடி உட்பட 30 பவுன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனதாக தெரிவித்தார். இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story