சென்னை: தடகள பயிற்சி கொடுப்பது போல நடித்து பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை..!


சென்னை: தடகள பயிற்சி கொடுப்பது போல நடித்து பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை..!
x
தினத்தந்தி 30 March 2022 1:42 PM IST (Updated: 30 March 2022 1:42 PM IST)
t-max-icont-min-icon

தடகள பயிற்சி கொடுப்பது போல நடித்து பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை, நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த 13வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.  சிறுவன் தினந்தோறும் அருகில் உள்ள மைதானத்தில் தனது பள்ளி நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து விளையாட செல்வது வழக்கம். 

அப்போது அங்கு வந்த மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கோபி கண்ணன்(32) என்பவர் சிறுவர்களிடம் சென்று "நான் உங்கள் அனைவருக்கும் இலவசமாக தடகள பயிற்சி அளிக்கிறேன்" என்று ஆசை வார்த்தை கூறினார். இதையடுத்து பெற்றோர் அனுமதியுடன் சிறுவர்கள் கடந்த சில நாட்களாக கோபி கண்ணனிடம் பயிற்சிக்கு சென்றுள்ளனர். 

அப்போது பயிற்சி அளிப்பது போல கோபி கண்ணன் சிறுவர்களிடம் தொடர்ந்து பாலியல் ரீதியாக அத்துமீறி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள்  தங்களது பெற்றோர்களிடம் இதுபற்றி கூறியுள்ளனர். இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசில் மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பூமாறன் சப் - இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோபி கண்ணனை கைது செய்தனர். அவன் மீது போக்சோ உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story