தனியார் பஸ் விபத்து - படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் படுகாயம்....!


தனியார்  பஸ் விபத்து  - படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் படுகாயம்....!
x
தினத்தந்தி 30 March 2022 3:00 PM IST (Updated: 31 March 2022 12:48 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே தனியார் பஸ் விபத்தில் படியில் பயணம் செய்த 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

சீர்காழி,

மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் நோக்கி இன்று ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் பயணம் செய்தனர்.

பஸ் சீர்காழி தென்பாதி அருகே வந்த போது முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்று உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது பஸ் உரசி உள்ளது. இந்த விபத்தில் பஸ்சின் படியில் பயணம் செய்த  விஜயராஜ் (வயது15 ) அர்ஜுனன்(17) என்று 2 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 2 மாணவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் சிதம்பரம்- மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story