தம்பதியை தாக்கி கொலை மிரட்டல்


தம்பதியை தாக்கி கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 30 March 2022 10:29 PM IST (Updated: 30 March 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

தம்பதியை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

லாஸ்பேட்டை நாவற்குளத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 56). இவரது மகன் கணேஷ்குமார் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே கருவடிக்குப்பத்தை சேர்ந்த பிரகாஷ், கணேஷ்குமாருக்கு கொடுத்த  கடனை  அவரது தந்தை குமரேசனிடம் திருப்பி கேட்டு வந்தார்.
சம்பவத்தன்று பிரகாஷ் அவரது நண்பர்கள் 2 பேருடன் குமரேசனிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். இதனை தடுக்க வந்த குமரேசனின் மனைவி வேலுமணியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் பிரகாஷ் உள்பட 3 பேர் மீது லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story