அய்யனார் கோவிலில் சிலைகள் உடைப்பு
கன்னியக்கோவில் அய்யனார் கோவிலின் சிலைகளை உடைத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியக்கோவில் பொதுசேவை மையம் அருகே அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று காலை பக்தர் ஒருவர் சாமி கும்பிட சென்றார். அப்போது அங்குள்ள அய்யனார் சிலையின் இருபுறத்திலும், துப்பாக்கி ஏந்திய காவலர் சிலை மற்றும் சில சிலைகள் சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து, சேதப்படுத்தப்பட்ட சிலைகளை பார்த்தனர். மேலும் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது குறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை சேதப்படுத்தியவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story