இடைக்கால பட்ஜெட்டால் மாநில வளர்ச்சிக்கு சீர்குலைவு


இடைக்கால பட்ஜெட்டால் மாநில வளர்ச்சிக்கு சீர்குலைவு
x
தினத்தந்தி 30 March 2022 11:22 PM IST (Updated: 30 March 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் மாநில வளர்ச்சி சீர்குலைந்துள்ளது என்று அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுச்சேரியில் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் மாநில வளர்ச்சி சீர்குலைந்துள்ளது என்று அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. அவைத்தலைவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
12 ஆண்டுகளாக...
ஒரு மக்கள் அரசின் மிக முக்கியமான கடமை ஒவ்வொரு       நிதியாண்டும் பட்ஜெட்டை  தவறாமல் சட்டசபையில் சமர்ப்பித்து, அதன் ஒப்புதலை பெறுவதுதான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டை தயார் செய்வதிலும், அதை சட்டசபையில் தாக்கல் செய்வதிலும் 11 ஆண்டுகளாக அரசு அக்கறை காட்டாமல் அலட்சியம் செய்வது வேதனையாக உள்ளது. இந்த ஆண்டும் புதுவையில் முழுபட்ஜெட் தாக்க செய்யாமல் இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும், ஏன் உலகத்தில் எந்த நாட்டிலும்     இவ்வாறு 12 ஆண்டுகளாக தொடர்ந்து வாக்கெடுப்பு அறிக்கையை (இடைக்கால   பட்ஜெட்) சமர்ப்பித்து மாநில வளர்ச்சியை சீர்குலைத்தது இல்லை. இதற்கு   முக்கிய  காரணம் நிர்வாகியாக உள்ள கவர்னர் தன் அரசியல் அமைப்பு சட்ட  கடமையை செய்ய தவறியதுதான்.
காரணம் என்ன?
நிதி      ஒதுக்கீட்டு  வாக் கெடுப்பு   அல்லது இடைக்கால பட்ஜெட்   அரிதாக ஏதாவது ஒரு ஆண்டு அசாதாரண சூழ்நிலை இருக்கும்போது சமர்ப்பிக்கப்படுவது என்பது உண்மைதான். அந்த சூழ்நிலை ஏதும் புதுச்சேரியில் இல்லாதபோது ஏன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
புதுவைக்கு இந்த ஆண்டிற்கு ரூ.1,729 கோடி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. மீதமுள்ள வருவாய் எவ்வளவு வரும்? என்று திட்டமிட்டு ஒரு வரைவு பட்ஜெட்டை தயார் செய்து திட்டக்குழு, மத்திய அரசின் ஒப்புதலை பெற்று மார்ச் கடைசி வாரத்தில் முழு பட்ஜெட்டை சமர்ப்பித்து இருக்கலாம். இந்த முன்னேற்பாடுகளை கவர்னர் ஏன் அரசை செய்ய சொல்லவில்லை.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் எத்தனை செயல்பாட்டுக்கு வந்துள்ளன? அதனால் ஏற்பட்ட நன்மைகள் என்ன  என்பதை அறிவிக்க     வேண்டியது அரசின் கடமையல்லவா? இதற்கு கவர்னர் பதில் அளித்தால் பொதுமக்கள் அவரது நேர்மையை பெரிதாக பாராட்டுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Next Story