நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்கள் கைது


நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்கள் கைது
x
தினத்தந்தி 31 March 2022 2:17 AM IST (Updated: 31 March 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 ஊழியர்களை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தை சேர்ந்தவர் தெய்வீகராசு மகன் அழகுவேல் (வயது 43). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தன்னுடைய நெல் மூட்டைகளை சிறுபாக்கத்தில் உள்ள தற்காலிக நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றார்.

அப்போது அங்கிருந்த பருவகால பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரன் (44) என்பவர், அவரது நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத அழகுவேல் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

கைது

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி, ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை அழகுவேல் நேற்று முன்தினம் இரவு தற்காலிக நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்த ராமச்சந்திரன் கூறியபடி லோடுமேன் கிருஷ்ணசாமி அந்த ரூ.10 ஆயிரத்தை வாங்கினார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story