வீடு எடுத்து விபசாரம்; பெண் புரோக்கர் உள்பட 3 பேர் கைது - இளம்பெண் மீட்பு
நாகர்கோவிலில், வீடுஎடுத்து இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாகர்கோவில்,
நாகா்கோவில் மேலராமன்புதூரில் உள்ள தெருவில் ஒரு வாடகை வீட்டில் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்களும், பெண்களும் வந்து செல்வதாக இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள் நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் நேசமணி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன் இருந்தார். அவருடன் 2 ஆண்களும் இருந்தனர். போலீசாரை கண்டதும் அனைவரும் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அத்துடன் இளம்பெண்ணையும் மீட்டனர். .
இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியை சோ்ந்தவர் என்பது தெரியவந்தது. இவரை கன்னியாகுமரி லீபுரத்தை சேர்ந்த ராஜம் (வயது 62) என்ற பெண், அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த நித்திரவிளை அங்கன்விளையை சேர்ந்த வினு (34), பாலவிளையை சேர்ந்த ஜோஸ் (43) மற்றும் பெண் புரோக்கர் ராஜம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story