வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்து செல்லும்: சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - கருணாஸ்


வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்து செல்லும்:  சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - கருணாஸ்
x
தினத்தந்தி 31 March 2022 2:35 PM IST (Updated: 31 March 2022 2:35 PM IST)
t-max-icont-min-icon

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்து செல்லும்: சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி - கருணாஸ்

சென்னை,

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு  கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் உள் ஒதுக்கீடை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தற்போது விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு இடஒதுக்கீடுக்கு விதித்த தடை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஏமாற்றமளிப்பதாக பாமக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் வரவேற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 

வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இடஒதுக்கீடை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டதன் மூலம் உண்மையான சமூக நீதிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

Next Story