உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலை நிகழ்ச்சிகள்


உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலை நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 31 March 2022 5:39 PM IST (Updated: 31 March 2022 5:39 PM IST)
t-max-icont-min-icon

உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

கோவை,

இன்று உலக திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் கோவை மாவட்ட திருநங்கைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தபட்டன . நடனம், கோலம், பேச்சுப்போட்டி, ஆடை அலங்கார அணிவகுப்பு, பாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. 

இதில் கலந்து கொண்ட 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பாரம்பரிய ஆடை அணிந்து அணிவகுப்பும் நடனமும் நடத்தினர். இதில் திருநங்கைகளை வாழவிடு  என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடத்தபட்டது. 

இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். முன்னதாக திருநங்கைகள் அவர்களது கோரிக்கைகளை அலுவலர்களிடம் முன்வைத்தனர். மேலும் பல்வேறு அரசு திட்டங்கள் தங்களுக்கு கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கைகள் செல்பி எடுத்துக் கொண்டனர்.


Next Story