கஞ்சா விற்ற 5 பேர் கைது


கஞ்சா விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 31 March 2022 10:58 PM IST (Updated: 31 March 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

லாஸ்பேட்டையில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் பெத்துசெட்டிப்பேட் பகுதிக்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்ற 5 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், செல்லப்பெருமாள்பேட்டை சேர்ந்த விருதகரி (வயது 21), தட்டாஞ்சாவடியை சேர்ந்த புவனேஸ்குமார் (21), லாஸ்பேட்டை வாசன் நகர் யோகேஸ்வரன் (21), கவுண்டம்பாளையம் முத்துக்குமரன் (25), சுபன்ராஜ் (21) என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் 2 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story