மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க ஆலோசனை


மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க ஆலோசனை
x
தினத்தந்தி 31 March 2022 11:01 PM IST (Updated: 31 March 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க ஆலோசிக்கப்படுவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மாணவர் சிறப்பு பஸ்களை இயக்க ஆலோசிக்கப்படுவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னர் மாளிகையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழாக்க புத்தகம்
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக பிரதமர் மோடி தேர்வுகள் மீதான விவாதம் என்ற தலைப்பில் நாளை (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடுகிறார். இது 5-வது நிகழ்ச்சி ஆகும். காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சி புதுவை கவர்னர் மாளிகையிலும் நடக்கிறது. இதில் 50 மாணவர்கள்  பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய தேர்வுக்கு போகும் போர் வீரர்கள் என்ற தலைப்பிலான புத்தகத்தின் தமிழாக்கம் வழங்கப்படும். பிரதமர் மோடியின் கலந்துரையாடல் உலக நாடுகளில் வாழும் இந்தியர்கள் மத்தியிலும் வெளியிடப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த நிகழ்ச்சியில் கவர்னர்கள், முதல்-அமைச்சர்கள், கல்வி அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
15 லட்சம் மாணவர்கள்       பங்கேற்பு
நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்களும், 90 ஆயிரம் பெற்றோர்களும் கலந்துகொள்கின்றனர். தெலுங்கானா கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் 150 மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.
கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது. இதற்காக உழைத்த அரசுக்கும், சுகாதாரத்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் சிறப்பு பஸ்
இதைத்தொடர்ந்து அவரிடம், மாணவர்கள் சிறப்பு பஸ் இயக்கப்படாதது, மதிய உணவின் தரம் குறைந்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
மாணவர்கள் சிறப்பு பஸ்சை இயக்குவது தொடர்பாக கல்வித்துறையுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 1 ரூபாய் கட்டணத்தில் இந்த பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டியுள்ளது. கொரோனா காரணமாக இந்த பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன. அவற்றை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது. அதில் குறைகள் இருந்தால் களையப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story