முதியவரை தாக்கி கொலை மிரட்டல்


முதியவரை தாக்கி கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 31 March 2022 11:35 PM IST (Updated: 31 March 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை காளத்தீஸ்வரர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 77). பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஆசிரமவாசி. இவர்களது உறவினர்கள் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். ஸ்ரீகாந்தை கடந்த சில ஆண்டுகளாக ராஜேஸ்வரி என்பவர் பராமரித்து வந்தார்.
இதற்கிடையே இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஸ்ரீகாந்தை, ராஜேஸ்வரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ராஜேஸ்வரி மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story