பா.ம.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது


பா.ம.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 1 April 2022 2:46 AM IST (Updated: 1 April 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.

சென்னை,

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது; அதே நேரத்தில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்தும், அதன்படி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்து முடிவு எடுப்பதற்காக பா.ம.க.வின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற உள்ளது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story