அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி - போக்குவரத்துத் துறை
அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை ஒதுக்கீடு செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி செய்து கொடுக்கப்படும்.
* பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகளை ஒதுக்கீடு செய்து தர போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா பேருந்துகளில் 1UB மற்றும் 4UB இருக்கைகளை ஒதுக்க வேண்டும்.
* பேருந்து புறப்படும் வரை பெண்கள் முன்பதிவு செய்யாதபட்சத்தில் பொது படுக்கையாக கருதி மற்றவர்களுக்கு ஒதுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story