ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலையில் பயங்கர தீ - அரிய வகை மூலிகைகள் எரிந்து சேதம்


ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலையில் பயங்கர தீ - அரிய வகை மூலிகைகள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 1 April 2022 11:43 AM IST (Updated: 1 April 2022 11:43 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே உள்ள ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததால் அரிய வகை மூலிகைச் செடிகள் மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

வந்தவாசி, 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததால் அரிய வகை மூலிகைச் செடிகள் மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1440 அடி உயரத்தில் ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலை உள்ளது. இந்த மலையில் அரியவகை மூலிகைச் செடிகள் மரங்கள் உள்ளன. இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் மலையில் தீ வைத்துள்ளனர் இதனால் மலையின் ஒரு பகுதி மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனால் மலையில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள் மரங்கள் தீயில் எரிந்து கருகியது. இதையடுத்து மலை எரிவது குறித்து வனக்காவலர்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்த போது வனக்காவலர்களின் தொலைபேசி எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று ஊர் மக்கள் தெரிவித்தனர்.

மேலும் தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது மலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் தவித்து நின்றனர். மேலும் இதுகுறித்து வந்தவாசி வடக்குப் போலீசார் மலை மீது தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story