செஸ் ஒலிம்பியாட்: சென்னை வந்த ரஷ்ய குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு!
மாமல்லபுரத்தில் "செஸ் ஒலிம்பியாட்" நடைபெறுவதையொட்டி ரஷ்ய குழுவினர் இரண்டாவது நாளாக போக்குவரத்து-உணவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி போர் பாயிண்ட் ரிசார்ட்டில் ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 150 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் போட்டி நடைபெறும் அரங்கம், தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் முக்கிய இடங்கள் பற்றியும் 3 நாட்கள் ஆய்வு செய்வதற்காக சர்வதேச செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோச் ஆர்கடி தலைமையிலான குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
அவர்கள் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் உள்ள இடங்களை முதல் கட்டமாக ஆய்வு செய்தனர். இன்று 2-வது நாளாக வீரர்கள் பயணம் செய்யும் டூரிஸ்ட்கார், தனியார் பஸ் நிறுவனங்களை பற்றியும், பஸ்சின் தன்மைகள், பயண நேரம் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
நாளை 150 நாடுகளின் பாரம்பரிய உணவுகள் எங்கெல்லாம் கிடைக்கும். இதனை தயாரிக்கும் இந்திய நாட்டின் முக்கிய சமையல் கலைஞர்கள் யார்? வெளிநாடுகளில் இருந்து எந்தெந்த நாட்டு சமையல் கலைஞர்களை இந்தியாவிற்கு அழைத்து வருவது போன்ற முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ லோகோ விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story