10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு..!


10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு..!
x
தினத்தந்தி 1 April 2022 1:55 PM IST (Updated: 1 April 2022 2:20 PM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி 1 முதல் தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், தேர்வுகளும் தொடங்கிவிட்டன.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் முதற்கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதிக்குள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

செய்முறை மதிப்பெண் பட்டியல்களை பள்ளிகள் மே 4-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story