தமிழ் புத்தாண்டு: சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் இயக்கம்


தமிழ் புத்தாண்டு: சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 1 April 2022 2:28 PM IST (Updated: 1 April 2022 2:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்புத்தாண்டை முன்னிட்டு சென்னை-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

தமிழ்புத்தாண்டு, விஷூ மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்டரில் இருந்து எர்ணாகுளத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. 

அதன்படி, வருகிற 13-ந் தேதி இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.06007) புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். திருப்பூருக்கு இந்த ரெயில் நள்ளிரவு 1.05 மணிக்கு வரும்.

17-ந் தேதி இரவு 10.40 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரெயில் (எண்.06008) மறுநாள் காலை 10.25 மணிக்கு சென்னை சென்டரலை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு அதிகாலை 3.20 மணிக்கு வரும். இந்த ரெயில் காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story