கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி....!


கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி....!
x
தினத்தந்தி 1 April 2022 5:30 PM IST (Updated: 1 April 2022 5:16 PM IST)
t-max-icont-min-icon

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குருபரப்பள்ளி,

கர்நாடக, ஆந்திரா மாநில எல்லையையொட்டி உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நாளை தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை கொண்டாடப்படுகிறது.

இதற்காக இன்று கிருஷ்ணகிரி அருகே குந்தராப்பள்ளியில் சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. ஆடுகள், வாங்கவும், விற்பனை செய்யவும், உள்ளூர் மற்றுமின்றி வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

இதேபோல், வேலூர், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி போன்ற மாவட்டத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் குவிந்தனர். இதனால் ஆடு விலை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. ஆடுகளை, வாங்கவும், விற்பனை செய்யவும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் சந்தையில் குவிந்தனர்.

இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது:

கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக யுகாதி பண்டிகையின் போது ஆடுகள் விற்பனை குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது, யுகாதி பண்டிகை மற்றும் அரியக்கா, பெரியக்கா கோவில் திருவிழா உள்ளிட்டவற்றால் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. 

10 கிலோ எடைக் கொண்ட ஆடு ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையானது. வழக்கத்தைவிட ரூ.3 ஆயிரம் கூடுதலாக விற்பனையானது. சுமார் 10 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனையாகி இருக்கும். இதன் மூலம் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story