திருச்சி: பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான்...!
திருச்சி அருகே பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
திருச்சி,
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர் ஓட்டம் திருச்சியில் இன்று காலை நடந்தது.
திருச்சி கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி சார்பில் நடந்த இந்த மாரத்தான் போட்டி பெரியார் நூற்றாண்டு வளைவு அருகில் இருந்து தொடங்கி எல்.ஐ.சி. காலனி, கே.கே.நகர் வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் சென்று பள்ளி வளாகத்தில் முடிந்தது.
இந்த தொடர் ஓட்டத்தில் மாணவ-மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story