கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட புதுச்சேரி திருப்பதி ரெயில் மீண்டும் இயக்கம்
புதுச்சேரி- திருப்பதி இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
புதுச்சேரி
புதுச்சேரி- திருப்பதி இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
திருப்பதி ரெயில்
புதுச்சேரியில் இருந்து நாள்தோறும் பிற்பகலில் திருப்பதிக்கு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலானது கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
அதன்பின் தொற்று குறைந்து பல ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையிலும் புதுச்சேரி - திருப்பதி ரெயில் இயக்கப்படாமலேயே இருந்தது. இந்தநிலையில் இந்த ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.
இதன்படி தினந்தோறும் பிற்பகல் 2.55 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் இந்த மெமு ரெயில் இரவு 11 மணிக்கு திருப்பதி செல்கிறது. திருப்பதியில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மதியம் 12.50 மணிக்கு புதுச்சேரியை வந்தடைகிறது.
நின்று செல்லும் ஊர்கள்
ரெயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் மிகக்குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர். விரைவில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரெயிலானது சின்னபாபுசமுத்திரம், விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், திண்டிவனம், ஒலக்கூர், தொழுப்பேடு, மதுராந்தகம், செங்கல்பட்டு, பாலூர், வாலாஜாபாத், காஞ்சீபுரம் (கிழக்கு), காஞ்சீபுரம், திருமால்பூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களில் நின்று செல்கிறது.
Related Tags :
Next Story