தாகூர் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்


தாகூர் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2022 11:18 PM IST (Updated: 1 April 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

தாகூர் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசபக்தி யாத்திரை கடந்த மாதம் 20-ந்தேதி லாஸ்பேட்டை தாகூர் கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமையில் தொடங்கியது. 14 நாட்கள்   நடத்த   திட்டமிடப்பட்ட  இந்த  யாத்திரை  24-ந்தேதி பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு வந்தபோது அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை கண்டித்து கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் கடந்த 28-ந்தேதி முதல் தனது அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பணிசெய்து வருகிறார். தத்துவத்துறை பேராசிரியர் சம்பத்குமாரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்த அவர்கள் சாலைமறியலுக்கு முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்ததை தொடர்ந்து கல்லூரி வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story