‘ரிமோட்’ மூலம் போக்குவரத்து சிக்னலை இயக்கும் வசதி சென்னையில் அறிமுகம்


‘ரிமோட்’ மூலம் போக்குவரத்து சிக்னலை இயக்கும் வசதி சென்னையில் அறிமுகம்
x
தினத்தந்தி 2 April 2022 12:29 AM IST (Updated: 2 April 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

‘ரிமோட்’ மூலம் போக்குவரத்து சிக்னலை இயக்கும் வசதி சென்னையில் அறிமுகம்.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக 312 இடங்களில் சிக்னல்கள் இயங்குகின்றன. வாகன நெரிசலுக்கு ஏற்ப போக்குவரத்து சிக்னல்களில் நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்சு, தீயணைப்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வாகனங்கள் வரும் போது போலீசாரே சிக்னலை சுவிட்ச் மூலம் மாற்றும் வசதி உள்ளது. தற்போது போக்குவரத்து போலீசில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீசார் எல்லைக்குட்பட்ட காந்தி இர்வின் சந்திப்பு, கமிஷனர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பு, ரித்தர்டன் ரோடு, நாயர் பால சந்திப்பு, தாசப்பிரகாஷ் ஆகிய 5 இடங்களில் உள்ள சிக்னல்களை ‘ரிமோட்’ மூலம் இயக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு, கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலை ‘ரிமோட்’ மூலம் இயக்கி வைத்தார். இந்த ‘ரிமோட்’ வசதி மற்ற சிக்னல்களிலும் விரிவுப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story