அரசு டாக்டர்கள் வரும் 11-ந் தேதி ஆர்ப்பாட்டம்
அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
சென்னை,
அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள்பிள்ளை நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தற்போது புதிதாக வந்துள்ள தி.மு.க. அரசும் இதுவரை எந்த ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பும் வழங்கவில்லை.
ஊதிய உயர்வு, கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்கள் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தில் வரும் 11-ந்தேதி சென்னை பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டமும், சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள மறைந்த டாக்டர் லட்சுமி நாராயணனின் நினைவிடத்தில் தொடர்ந்து மே மாதம் 18-ந்தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story