லாரி கவிழ்ந்து விபத்து - பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
பல்லடம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸுக்காக காத்திருந்தவர்கள் அதிஷ்டவசமாக தப்பினர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
ஓசூரில் இருந்து கோவை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதில் லேசான காயங்களுடன் ஓட்டுனர் உயிர் தப்பினார். அதிர்ஷ்டவசமாக பஸ் நிறுத்தத்திற்கு சுமார் 50 அடி தொலைவிலேயே இந்த விபத்து ஏற்பட்டதால் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story