லஞ்சத்தில் அதிரடி ஆஃபர் - கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்..!


லஞ்சத்தில் அதிரடி ஆஃபர் -  கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்..!
x
தினத்தந்தி 2 April 2022 12:01 PM IST (Updated: 2 April 2022 12:01 PM IST)
t-max-icont-min-icon

நகை கடன் தள்ளுபடி ஆன பயனாளியிடம் ரூபாய் 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட வீடியோ வெளியானதால் பேளுக்குறிச்சி கூட்டுறவு சங்க செயலாளர் கோவிந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக் குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த சங்கத்தில் சமீபத்தில் 311 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

அதை தொடர்ந்து சில பயனாளிகளிடம் அந்த கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த செயலாளர் கோவிந்தன் (வயது 50) நாமக்கல் அலுவலகத்திற்கு ரூபாய் 2 ஆயிரம் தரவேண்டி இருப்பதால் அத்தொகையை தரவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் இது தொடர்பாக அவர் ஒரு பயனாளிகளிடம் மற்றவருக்கு 6000 ரூபாய் வாங்குவதாகவும் நீங்கள் எனது உறவினர் என்பதால் 2 ஆயிரம் கொடுத்தால் போதும். உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனவும், வற்புறுத்தல் இல்லை விரும்பினால் தரலாம் என கோவிந்தன் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது. 

அதைத்தொடர்ந்து அந்த வீடியோ வைரல் குறித்து கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் இன்று பேளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சங்க செயலாளர் பயனாளிகளிடம் லஞ்சம் கேட்டது தெரியவந்தது. அதையடுத்து அவரை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story