டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை: புகை பழக்கம் உடல்நலத்திற்கு கேடு - வாழைப்பழம் சாப்பிடுங்கள்
ஈரோடு அருகே உள்ள சின்னட்டி பாளையம் பகுதியில் வாழைப்பழம் சாப்பிட்டு தேனீர் அருந்தி டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.
ஈரோடு:
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்ததை தொடர்ந்து டி.என்.பாளையம் அருகேயுள்ள பெரிய கொடிவேரி அணை பகுதியில் இன்று சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து பெரிய கொடிவேரியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் சின்னட்டி பாளையத்தில் உள்ள டீ கடையில் தேனீர் அருந்தினார், அதோடு அக்கடையில் இருந்து வாழைப்பழம் எடுத்து சாப்பிட்ட சைலேந்திரபாபு கிராமத்து வாழைப்பழம் இயற்கையுடனும் சுவையாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும் டீ கடையில் புகை பிடித்து கொண்டு இருந்த சிலரிடம் வாழைப்பழம் சாப்பிடுங்கள் உடல் நலத்திற்கு நல்லது, புகை பழக்கம் உடல்நலத்திற்கு கேடு செய்யும் என்றும் சைலேந்திரபாபு அறிவுரை வழங்கி சென்றார். இந்த நிகழ்வு குறித்த வீடியோ பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
Related Tags :
Next Story