திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருட்டு


திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 2 April 2022 9:28 PM IST (Updated: 2 April 2022 9:28 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனின் ஐபோன் திருடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்த விழாவில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருடப்பட்டுள்ளது. டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது செல்போன் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story