புதுவை ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை


புதுவை  ரவுடிகளின் வீடுகளில் போலீசார்  அதிரடி சோதனை
x
தினத்தந்தி 2 April 2022 9:37 PM IST (Updated: 2 April 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

புதுவை ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

புதுச்சேரி
புதுவை ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

குண்டர் சட்டம்

புதுவையில் ரவுடிகளை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இருந்தபோதிலும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து வருகிறது. சில ரவுடிகள் ஊருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில் ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை போலீசார் நேற்று அதிகாலையில் ரவுடிகளின் வீடுகளில் திடீரென அதிரடி சோதனை நடத்தினார்கள். மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் வாணரப்பேட்டை, ரோடியர்பேட், ஆட்டுப்பட்டி, பெரியார்நகர், அனிதா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தினார்கள்.

எச்சரிக்கை

போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், பக்தவச்சலம், சுபம்கோஷ் மற்றும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. வீடுகளில் இருந்த சில ரவுடிகளை பிடித்து குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். 
போலீசாரின் இந்த சோதனை காரணமாக அந்த பகுதிகளில் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story