போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
புதுவை சாரத்தை சேர்ந்தவர் சிவராமன் (வயது 33). ஐ.டி. ஊழியர். இவரது மனைவி வெரோனிகா (28). இவருக்கு கர்ப்பை நீர்க்கட்டியை அகற்ற புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்ந்தார். அவருக்கு கடந்த 19-ந்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பினார். இதற்கிடையே கடந்த 25-ந் தேதி வெரோனிகாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் வெரோனிகா இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் சமூக அமைப்பினர் இன்று இரவு பெரியக்கடை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வெரோனிகாவின் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Related Tags :
Next Story