ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் - ரிக் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றால் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் நலிவடைந்துள்ளதாக ரிக் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசியில், தமிழ்நாடு ரிக் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மற்றும் ரிக் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட ரிக் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். அப்போது டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றால் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் நலிவடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் பேட்டியளித்த ரிக் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், தற்போது தங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதாகவும், விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்காக பணியாற்றும் தங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் ரிக் லாரிகளுக்கு நாடு முழுவதும் ஒரே வரி விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story