பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - காரில் இருந்தவர் உடல் கருகி பலி


பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - காரில் இருந்தவர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 3 April 2022 8:25 AM IST (Updated: 3 April 2022 8:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் நெடுஞ்சாலையில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், இரண்டும் எரிந்து சாம்பலானது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், படியூர் அருகே பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டும் எரிந்து சாம்பலானது. இதில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், தளகுந்தா பகுதியில் இருந்து குழந்தைகள் உள்பட சுமார் 25க்கும் மேற்பட்டோர், காங்கேயம் அடுத்த காமாட்சிபுரம் கோயிலுக்கு பேருந்தில் பயணித்தர். அப்போது திருப்பூர்-திருச்சி நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது, படியூர் அருகே எதிரே வந்த கார் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பேருந்தின் அடிப் பகுதியில் கார் சிக்கியது. 

அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த அனைவரும் இறங்கிய நிலையில்  காரில் இருந்த ஒருவர் மீளமுடியாதபடி தவித்தார். இதனிடையே கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் காரின் மேல்நின்ற பேருந்தும் முழுமையாக தீக்கிரையானது.  காரில் சிக்கிய நபர் தீயில் உடல்கருகி உயிரிழந்தார். 

தகவலறிந்து வந்த காங்கேயம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.  இதனால் திருப்பூர்-திருச்சி-கரூர் மார்க்க சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து முடங்கியது. விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் காரில் உயிரிழந்த நபர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story