கொடைக்கான‌ல் அருகே காட்டுயானை அட்டகாசம் - விவ‌சாயிக‌ள் அச்ச‌ம்..!


கொடைக்கான‌ல் அருகே காட்டுயானை அட்டகாசம் - விவ‌சாயிக‌ள் அச்ச‌ம்..!
x
தினத்தந்தி 3 April 2022 9:24 AM IST (Updated: 3 April 2022 9:24 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கான‌ல் அருகே காட்டுயானை விவ‌சாய‌ நில‌ங்க‌ளை சேத‌ப்ப‌டுத்தி வருவ‌தால் விவ‌சாயிக‌ள் அச்ச‌த்தில் உள்ளனர்.

திண்டுக்கல்,

கொடைக்கானல் மலைப் பகுதிகளான பாரதி அண்ணா நகர் , அஞ்சு வீடு, பேத்துப்பாறை, வெங்கல வயல், உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அங்குள்ள விவசாய நிலங்களில் யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து தொடர்ந்து  சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் நேற்று வெங்கல வயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் விவசாயம் செய்துள்ள வாழை உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், யானையை வனப்பகுதிக்குள் விரட்டி கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story