சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை


சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 3 April 2022 12:35 PM IST (Updated: 3 April 2022 12:36 PM IST)
t-max-icont-min-icon

மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சவுந்தரராஜன், வியாசர்பாடியில் 59-வது வட்ட செயல்வீரராக இருந்து வந்துள்ளார்.

சென்னை, 


எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் என்பவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்காக தண்ணீர் கொண்டு வந்த போது அடையாளம் தெரியாத கும்பலால் சவுந்தரராஜன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 

முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.  


Next Story