மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்த பொதுமக்கள்..!
பொன்னமராவதி அருகே மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்பிடித்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் செவிலிகண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதில் செவலூர் ஊராட்சி செவிலிக்கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் செவலூர், மலையடிப்பட்டி, குழிபிறை, பனையப்பட்டி , ஆத்தூர், வீரராணாம்பட்டி, செம்பூதி, ஆலவயல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, தூரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர்.
அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story