திருப்பத்தூர்: பயணிகளை ஏற்றி சென்ற மினிவேன் உரிமையாளருக்கு அபராதம்....!


திருப்பத்தூர்: பயணிகளை ஏற்றி சென்ற மினிவேன் உரிமையாளருக்கு அபராதம்....!
x
தினத்தந்தி 3 April 2022 3:45 PM IST (Updated: 3 April 2022 3:35 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே பயணிகளை ஏற்றி சென்ற மினிவேன் உரிமையாளருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சேம்பரை பகுதியில் நேற்று விபத்து ஏற்பட்டு 11 பேர் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதன்படி வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் தலைமையிலான போலீசார், வாணியம்பாடி - ஆம்பூர் சாலையில் உள்ள வளையாம்பட்டு பகுதியில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மினி வேன் ஒன்றில் 10-க்கும் மேற்பட்ட ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆம்பூரை நோக்கி சென்ற மினி சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பயணிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த வாகன உரிமையாளருக்கு ரூ. 3 ஆயிரத்து 700 அபராதம் விதித்து,  டிரைவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.



Next Story