தமிழக மீனவர்கள் 12-ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு,
இந்த நிலையில் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் 12 பேரையும் ஏப்.12 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சனிக்கிழமை இரவு கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 29-ம் தேதி முதல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறை. கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை மொத்தம் 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன.
Related Tags :
Next Story