வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்: 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்: 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு  இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
x
தினத்தந்தி 3 April 2022 10:58 PM IST (Updated: 3 April 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நடப்பு ஆண்டில் இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும், வதந்திகளை யாரும் நம்ப ேவண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

புதுக்கோட்டை:
இறுதித்தேர்வு நடைெபறும்
புதுக்கோட்டை அருகே ஒரு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்க வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
‘‘1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் இறுதித்தேர்வு நிச்சயம் நடைபெறும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டப்படி பொதுத்தேர்வு நடைபெறும். பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் தேர்வு நடைபெறும். 
நீட் தேர்வு 
நீட் தேர்வு ஜூலை மாதம் 17-ந் தேதி நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்போராட்டம் மூலம் விலக்கு பெற முயற்சிகள் எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் வெற்றிகரமாக முடிந்தது’’.
இவ்வாறு அவர் கூறினார். . 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு கிடையாது என நேற்று  தகவல் பரவிய நிலையில், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு நடைபெறும் என அமைச்சர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தை தவிர்க்க நடவடிக்கை
முன்னதாக திருச்சிகாட்டூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிருபர்களிடம் கூறுகையில், தற்போது சென்னையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விபத்து போன்று இனி எந்த பள்ளியிலும் நடைபெறாது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தனியார் பள்ளிகளில் உள்ள பஸ்களை முழுமையாக சோதனை செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ஒரு பஸ்சில் 30 இருக்கைகள் உள்ளது என்றால், அந்த பஸ்சில் 30 குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
பள்ளி மாணவர்கள் ஓடும் பஸ்சில் ஏறுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது மாணவர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும். தமிழக அரசு ‘நீட்’ தேர்வை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. இது பற்றி முதல்-அமைச்சர் டெல்லி சென்றபோது பிரதமரிடம் மனு அளித்து கோரிக்கை வைத்துள்ளார், என்றார்.

Next Story