பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்


பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்
x
தினத்தந்தி 3 April 2022 11:03 PM IST (Updated: 3 April 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகிறது. இன்றும் 11-வது நாளாக விலை உயர்ந்திருந்தது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகிறது. இன்றும் 11-வது நாளாக விலை உயர்ந்திருந்தது.
பெட்ரோல்
பெட்ரோல் விலை கடந்த மார்ச் 22-ந் தேதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்து, கடந்த 30-ந் தேதி ஒரு லிட்டர் 100 ரூபாய் 36 காசை தொட்டது. ஏற்கனவே இருந்த உச்சத்தை தாண்டிய வரலாறு காணாத விலை உயர்வாக பார்க்கப்பட்டது. அதன் பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்தபடி ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.
கடந்த 22-ந் தேதி முதல் ஏற்றத்துடன் காணப்படும் பெட்ரோல்-டீசல் விலை நேற்று வரையிலான 13 நாட்கள் நிலவரப்படி, 11 நாட்கள் விலை அதிகரித்து இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அந்த வகையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 70 காசுக்கு விற்பனை ஆனது.
டீசல்
டீசல் விலையை பொறுத்தவரையில் அதுவும் ராக்கெட் வேகத்தில் புதிய உச்சத்தை நோக்கி பயணம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி ஒரு லிட்டர் 102 ரூபாய் 79 காசுக்கு விற்பனையானதுதான் டீசலின் அதிகபட்ச விலையாக இருந்தது. தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருக்கும்     டீசல்  விலை, இன்னும் சில நாட்களில் புதிய உச்சத்தை எட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று டீசல் லிட்டருக்கு 76 காசு அதிகரித்து இருந்தது. அதன்படி, ஒரு லிட்டர் டீசல் 91 ரூபாய் 12 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படியே விலை அதிகரித்தால், அடுத்த சில நாட்களில் டீசல் விலை சதம் அடித்துவிடும்.
சைக்கிளுக்கு மவுசு
பெட்ரோல்   விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால் பிரதான நகரங்களில் அலுவலகத்துக்கு செல்பவர்களில் பலர் மோட்டார் சைக்கிள், கார்களை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். புதுச்சேரியிலும் மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சைக்கிளுக்கும் திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.

Next Story